2015ல் சித்தூர் மேயர் அனுராதா, அவரது கணவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 5 பேருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பு
ஆந்திரா: 10 ஆண்டுகளாக நடைபெற்று வந்த வழக்கில் சித்தூர் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி சீனிவாசராவ் இன்று தீர்ப்பு வழங்கினார். சந்திரசேகர் என்ற சிண்டு, முல்பாகல் வெங்கடேஷ், ஜெயப்பிரகாஷ் ரெட்டி, மஞ்சுநாத், வெங்கடேஷுக்கு மரண தண்டனை விதித்தனர். மேயர் அலுவலகத்தில் புகுந்த கும்பல் அனுராதா, அவரது கணவர் கட்டாரி மோகன் நாயுடுவை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றது. பல ஆண்டுகால முன்பகையால் அனுராதா, கட்டாரி மோகன் நாயுடு கொலை செய்யப்பட்டது விசாரணையில் தெரிய வந்தது.
 
  
  
  
   
