ஐதராபாத்: ஐதராபாத்தில் கிருஷ்ணாஷ்டமி கொண்டாட்டத்தில் கிருஷ்ணர் ஊர்வலத்தில் மின்சாரம் தாக்கி 5 பேர் உயிரிழந்தனர். கிருஷ்ணர் ஊர்வலத்தில் தேரை இளைஞர்கள் கையால் இழுத்துச் சென்றபோது, மின்கம்பிகளில் மோதி விபத்து ஏற்பட்டது. கிருஷ்ணா (21), சுரேஷ்(34), ஸ்ரீகாந்த்(35), ருத்ரவிகாஸ்(39), ராஜேந்திரரெட்டிரு45) ஆகியோர் உயிரிழந்தனர். மின்சாரம் தாக்கியதில் படுகாயம் அடைந்த 4 பேர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
+
Advertisement