மாலை 6 மணிக்கு மேட்டூர் அணையில் இருந்து 50,000 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட உள்ளது. வெளியேற்றப்படும் நீரின் அளவு 35,000 கனடியில் இருந்து 50,000 கன அடியாக அதிகரிக்கப்பட உள்ளது. அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக 21,300 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட உள்ளது. 16 கண் மதகு வழியாக 28,700 கன அடி நீர் வெளியேற்றப்பட உள்ளதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளார்.
+
Advertisement