வேதாரண்யம் : வேதாரண்யம் பகுதியில் 5,000 மீனவர்கள் கடலுக்குகள் மீன்பிடிக்கச்செல்லவில்லை. இதனால் மீன்கள் விலை சற்று உயர்ந்தது.
தமிழகத்தில் 16 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதையடுத்து தமிழக கடற்கரை பகுதிகளில் பலத்த காற்று வீசும் என்பதால் நாகை மாவட்டத்தில் உள்ள நாகூர், நாகப்பட்டினம், அக்கரைப்பேட்டை, விழுந்தமாவடி , வானவன் மகாதேவி, வெள்ளப்பள்ளம் , புஷ்பவனம், ஆறுகாட்டுத்துறை, கோடிக்கரை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மீனவர்கள் மீன்பிடிக்க செல்லக்கூடாது என மீன்வளத்துறை அறிவிப்பு செய்து எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்நிலையில் நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் பகுதியில் உள்ள வெள்ளப்பள்ளம், புஷ்பவனம், ஆறுகாட்டுத்துறை, கோடிக்கரை உள்ளிட்ட கிராமங்களில் இருந்து 5000 ஆயிரம் மீனவர்கள் 10 வது நாளாகமீன் பிடிக்க கடலுக்கு செல்லவில்லைஆயிரத்துக்கு மேற்பட்ட பைபர் படகுகள்கரையோரம் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
மீன் பிடிக்க கடலுக்கு செல்லாததால் மீனவர்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். மேலும் பரபரப்பாக காணப்படும் கடற்கரைப் பகுதிகள் வெறிச்சோடி காணப்படுகிறது.
மீனவர்கள் கடற்கரை ஓரங்களில் வைத்து இருந்த படகுகளையும் மீன்பிடி வலைகளையும் பாதுகாப்பான இடங்களில் வைத்துள்ளனர். மீன்வளத்துறையின் மறு அறிவிப்பு வந்த பிறகே மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல இயலும் என்ற நிலையில் மீனவர்கள் வீடுகளில் முடங்கி போய் உள்ளனர்.
பத்து நாட்களாக மீன்பிடிக்கச் செல்லாததால் மீன்கள் விலை சற்று உயர்ந்துள்ளது. இதே வேளையில் மீனவர்கள் கரைவலைக்கு சென்று சிறிதளவு மீன்களை பிடித்து உள்ளூர் தேவைகளை பூர்த்தி செய்து வருகின்றனர்.
இதனால் ஒரு கிலோ 500 ரூபாய்க்கு விற்பனை செய்த காலாமின் ரூபாய் 700க்கும், வாவல் மீன் ஒரு கிலோ 1000த்தில் இருந்து ரூபாய் 1400 க்கு, 300 ரூபாய்க்கு விற்பனை செய்த இறால் 400 ரூபாய்க்கும், 350க்கு விற்பனை செய்த நண்டு 500க்கும் விற்பனை ஆகிறது.
மீன் பிடிக்கச் செல்லஇன்னும் ஓரிரு நாட்கள் ஆகும் என்றும், அதுவரை இந்த விலை உயர்வு குறைய வாய்ப்பில்லை என்றும், பெரும்பாலான மீனவர்கள் மீன் பிடிக்க சென்றால் விலை குறையும் என மீனவர்கள் தெரிவித்தனர்.



