வேலூர்: குடியாத்தம் அருகே மிளகாய்ப் பொடி தூவி காரில் கடத்தப்பட்ட 4 வயது சிறுவன் மீட்கப்பட்டான். கடத்தப்பட்ட சிறுவன் மாதனூர் அருகே சாலையோரம் காவல்துறையால் மீட்பு. திருப்பத்தூர் மாவட்டம் மாதனூர் என்ற இடத்தில் சிறுவனை இறக்கிவிட்டு தப்பியது கும்பல். கடத்தப்பட்ட சிறுவனை மீட்டு தனிப்படை போலீசார் குடியாத்தம் அழைத்து வந்தனர். பள்ளியில் இருந்து அழைத்து வந்தபின் வீடு முன் நின்றிருந்த வேணு என்பவரின் 4 வயது குழந்தை கடத்தப்பட்டது.
+
Advertisement