சென்னை: சென்னை எண்ணூர் பெரியகுப்பம் பகுதியில் கடல் அலையில் சிக்கி 4 பெண்கள் உயிரிழந்தனர். கடல் அலையில் சிக்கிய ஒரு பெண்ணை காப்பாற்ற முயன்றபோது அடுத்தடுத்து அலையில் சிக்கி 4 பேரும் உயிரிழந்தனர். கடல் அலையில் சிக்கி உயிரிழந்த பெண்கள் 25 முதல் 40 வயதுக்குட்பட்டவர்கள் என போலீசார் தகவல். பெரியகுப்பம் பகுதியில் ஒரேநேரத்தில் 4 பெண்களின் சடலங்கள் கரை ஒதுங்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
+
Advertisement 
 
  
  
  
   
