மதுரை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ‘‘மக்களைக் காப்போம்; தமிழகத்தை மீட்போம்’’ என்னும் பெயரில் கடந்த ஜூலை 7 முதல் பிரசார பயணம் மேற்கொண்டு வருகிறார். இதில், 4ம் கட்டமாக இன்று (செப்.1) துவங்கி 4ம் தேதி வரை மதுரை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளில் பிரசாரம் செய்கிறார். இதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்று காலை 11.30 மணிக்கு எடப்பாடி பழனிசாமி மதுரை வந்தார்.
பின்னர் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு சென்று வேலம்மாள் மருத்துவமனை அருகே உள்ள தனியார் விடுதியில் ஓய்வெடுத்தார். மாலை 4 மணியளவில் திருப்பரங்குன்றம் 16 கால் மண்டபம் பகுதியில் அவர் பிரசாரம் தொடங்க உள்ளார்.