வல்லம்: திமுக முன்னாள் எம்பியும், தற்போதைய டெல்லி சிறப்பு பிரதிநிதியுமான ஏ.கே.எஸ்.விஜயனுக்கு தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் அருகே சேகரன் நகரில் ஒரு வீடு உள்ளது. இந்த வீட்டில் கடந்த மாதம் 28-ம் தேதி அவர் இல்லாதபோது கொள்ளையர் புகுந்து 87 பவுன் நகையை கொள்ளையடித்து சென்றுள்ளனர். விசாரணையில், தர்மபுரியை சேர்ந்த தாய், மகன்கள், மகள் கொள்ளையில் ஈடுபட்டதும், தஞ்சை புதிய பேருந்து நிலையம் அருகே விடுதியில் அறை எடுத்து தங்கி நோட்டமிட்டு கொள்ளையடித்துள்ளதும் தெரியவந்தது. போலீசார் தர்மபுரி விரைந்து சென்று ராயல் நகரை சேர்ந்த முகமது யூசுப் என்பவரின் மகன்கள் சாதிக் பாஷா (33), மொய்தீன் (37), மகள் ஆயிஷா பர்வீன் (30), மனைவி பாத்திமா ரசூல் (54) ஆகியோரை கைது செய்து 87 பவுன் நகைகளை பறிமுதல் செய்தனர்.
+
Advertisement


