சென்னை: விஜய், சூர்யா நடிப்பில் 2001ல் வெளியான ‘ப்ரண்ட்ஸ்’ திரைப்படம் ரீரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. வடபழனியில் உள்ள திரையரங்கில் சிறப்பு காட்சி வெளியிடப்பட்டது. திரைப்படத்தை பார்த்த ரசிகர்களை முகலிவாக்கம் பகுதியை சேர்ந்த யூடியூபர் கிரண் புரூஸ் (38) பேட்டி எடுத்தார். பிறகு படத்தை விமர்சனம் செய்து ெகாண்டிருந்தார். அப்ேபாது திரைப்படத்தை பார்க்க வந்த 4 பேர், யூடியூபர் கிரண் புரூஸை வழிமறித்து சரமாரியாக தாக்கியுள்ளனர். இதுகுறித்து வடபழனி காவல் நிலையத்தில் யூடியூபர் புகார் அளித்தார்.
விசாரணை நடத்திய போலீசார், ஆவடியை சேர்ந்த ஆட்டோ டிரைவர்களான பாலகிருஷ்ணன் (28), தனுஷ் (32), அசோக் (30) மற்றும் பார்த்தசாரதி ஆகியோரை கைது செய்தனர். யூடியூபரை பொது இடத்தில் தாக்கியது தொடர்பாக 4 தவெகவினர் மீதும் கொலை மிரட்டல், காயம் ஏற்படுத்துதல், ஆபாசமாக பேசுதல் உள்ளிட்ட 5 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பின்னர் 4 பேரையும் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.



