டெல்லி: காவிரி மேலாண்மை ஆணையத்தின் 46வது கூட்டம் டெல்லியில் டிசம்பர் 8ம் தேதி பிற்பகல் நடைபெறுகிறது. காவிரி ஆணையக் கூட்டத்தில் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி மாநில பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர். உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி கர்நாடகா தண்ணீர் திறந்துவிட வேண்டும் என தமிழ்நாடு தரப்பு வலியுறுத்த உள்ளது. மேகதாது தொடர்பாக உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதால் ஆணையத்தின் கூட்டம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
+
Advertisement

