நெல்லை: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில், 2006 வன உரிமைச்சட்டத்தை அங்கீகரித்து மீட்டெடுக்கக் கோரி நெல்லை மாவட்டம், பணகுடியில் ‘மலையேறி மாடு மேய்க்கும் போராட்டம்’ நேற்று காலை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு காவல்துறை அனுமதி அளிக்கவில்லை. இதனால் போராட்டத்தில் ஈடுபட இருந்த 400க்கும் மேற்பட்ட மாடுகள் காவல் துறையினரால் சிறைப்பிடிக்கப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டன. மேலும் தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு மேய்ச்சல் சமூக கூட்டமைப்பின் தலைவர் ராஜீவ்காந்தி உள்ளிட்ட மாடுகளின் உரிமையாளர்கள் 3 பேர் உட்பட 20 பேர் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து பணகுடியிலும், நெல்லையில் சீமான் தங்கியிருந்த எல்எஸ் மஹால் முன்பும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
+
Advertisement


