வந்தவாசி : திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி டவுன் புதிய பஸ் நிலையம் அருகே வசிப்பவர் பழனி(35), விறகு வெட்டும் தொழிலாளி. இவர் 4 ஆடுகளை வளர்த்து வந்தார்.
இந்த ஆடுகளை நேற்றுமுன்தினம் இரவு வழக்கம்போல் வீட்டின் அருகே கொட்டகையில் கட்டியிருந்தாராம். நேற்று காலை பார்த்தபோது 4 ஆடுகள் படுகாயங்களுடன் இறந்து கிடந்தது. நள்ளிரவில் தெருநாய்கள் கடித்து குதறியதில் 4 ஆடுகளும் பலியானது தெரியவந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்த கால்நடைதுறை, வருவாய்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். ஆடுகளை வளர்த்து பிழைப்பு நடத்திய நிலையில் 4 ஆடுகளும் பலியானதால் பழனி வேதனை அடைந்துள்ளார்.
விலங்குகளுக்கும், பொதுமக்களுக்கும் அச்சுறுத்தலாக சுற்றித்திரியும் தெருநாய்களை பிடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
