Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தாமிரபரணி ஆற்றில் வீசிய 3 உலோக சிலைகள் மீட்பு

வீரவநல்லூர்: நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி அருகே சக்திகுளம் கிராமம் உள்ளது. இங்குள்ள தாமிரபரணி ஆற்றில் அப்பகுதியினர் நேற்று குளிக்கும் போது ஆற்றில் 3 உலோக சுவாமி சிலைகள் கிடப்பதை கண்டனர். உடனடியாக சேரன்மகாதேவி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் வந்து 3 சிலைகளையும் மீட்டு, வருவாய்த்துறையினர், சிலை கடத்தல் தடுப்பு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். 6 தலையுடன் அமர்ந்த கோலத்தில் ஒன்றரை அடி உயரம் கொண்ட சிலை ஒன்றும், 3 அடியில் நின்ற கோலத்தில் அம்பாள் சிலை ஒன்றும், ஒரு அடியில் கை மட்டும் சிதிலமடைந்த சிறிய அம்பாள் சிலையும் மீட்கப்பட்டுள்ளது. 3 சிலைகளும், ஐம்பொன் சிலைகளாக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். அவை எந்த காலகட்டத்தை சேர்ந்தவை என்பது தெரியவில்லை. முழுமையாக ஆய்வு செய்த பிறகு விவரங்கள் தெரிய வரும் என்று அவர்கள் தெரிவித்தனர். இதனிடையே 3 சிலைகளை தாமிபரணி ஆற்றில் வீசிச் சென்றவர்கள் யார்? என்பது குறித்து சிலை கடத்தல் தடுப்பு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சிலைகள் வெள்ளத்தில் அடித்து வரப்பட்டதா? என்பது குறித்தும் விசாரணை நடக்கிறது.