நெல்லை: நெல்லை புதிய பஸ் நிலையத்தில் இருந்து தென்காசிக்கு கடந்த 6ம் தேதி நள்ளிரவு சுமார் 1.30 மணியளவில் அரசு பஸ் புறப்பட்டு சென்றது. நெல்லை சந்திப்பு ஈரடுக்கு மேம்பாலத்தில் பஸ் சென்று கொண்டிருந்த போது டவுனில் இருந்து சந்திப்பு பகுதிக்கு வந்த பைக் மீது அரசு பஸ் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பைக்கில் வந்த வாலிபர்கள் 3 பேர் தூக்கி வீசப்பட்டு ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். போலீசார் விசாரணையில், பலியானவர்கள் நெல்லையை சேர்ந்த லோகேஷ் (23), சாதிக் (22), சந்தோஷ் (22) என்பது தெரியவந்தது. இவர்கள் 3 பேரும் நேற்று முன்தினம் நெல்லை சந்திப்பு பகுதியில் உள்ள ஒரு கடையில் டீ குடிக்க பைக்கில் வந்த போது விபத்தில் இறந்தது தெரிய வந்துள்ளது.
+
Advertisement