சென்னை: 3 பல்கலைக்கழக துணைவேந்தர்களின் பதவிக்காலம் இன்று நிறைவுபெறுகிறது. மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை. துணைவேந்தர் பேராசிரியர் சந்திரசேகர் பதவிக்காலம் இன்று முடிகிறது. காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தராக ஜி.ரவியின் பதவிக்காலம் இன்று நிறைவுபெறுகிறது. வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழக துணைவேந்தர் ஆறுமுகத்தின் பதவிக்காலமும் இன்று முடிகிறது. தமிழ்நாட்டில் ஏற்கனவே 8 பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர் பதவியிடங்கள் காலியாக உள்ளன. அண்ணா பல்கலை, சென்னை பல்கலை, காமராசர் பல்கலை, பாரதியார் பல்கலை துணைவேந்தர் பதவி காலியாக உள்ளது. கல்வியியல் பல்கலை, அண்ணாமலை பல்கலை, பாரதிதாசன் பல்கலை., விளையாட்டு பல்கலை.க்கு துணைவேந்தர் இல்லை.
+
Advertisement