கடலூர்: செம்மங்குப்பத்தில் ரயில்வே கேட் மூடப்படாததே விபத்துக்கு காரணம் என்பது உறுதியானது. கடலூர் செம்மங்குப்பத்தில் தண்டவாளத்தை கடக்க முயன்ற பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்தில் 2 மாணவர்கள் உயிரிழந்தனர். இச்சம்பவம் தொடர்பாக கேட் கீப்பர் பங்கஜ் சர்மாவை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். தொடர்ந்து அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் செம்மங்குப்பத்தில் ரயில்வே கேட் மூடப்படாததே விபத்துக்கு காரணம் என்பது உறுதியானது. செம்மங்குப்பம் ரயில்வே கேட்டை மூடிவிட்டதாக கேட் கீப்பர் பங்கஜ் சர்மா பொய் கூறியதும் அம்பலமாகியுள்ளது.
ஆலப்பாக்கம் நிலைய அதிகாரியிடம் கேட் கீப்பர் பங்கஜ் சர்மா தவறான தகவலை கூறியது அம்பலமாகியுள்ளது. ரயில்வே கேட்டை மூடாமலே மூடியதாக பிரைவேட் நம்பரை ஆலப்பாக்கம் ரயில் நிலைய அதிகாரிக்கு கொடுத்துள்ளார். விபத்து நடந்தவுடன் கேட் கீப்பர், கேட்டை மூடவில்லை என்பதை ஒப்புக் கொண்டுள்ளார். ரயில் நிலைய அதிகாரியை தொடர்புகொண்டு கேட்டை மூடவில்லை என்பதை ஒப்புக் கொண்டுள்ளார். ஆலப்பாக்கம் ரயில் நிலைய அதிகாரியுடன் பங்கஜ் சர்மா பேசிய தொலைபேசி உரையாடல் பதிவாகி உள்ளது.
ரயில்வேதுறையின் தானியங்கி தொலைபேசி உரையாடல் பதிவை போலீசார் சேகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விசாரணையில் கிடைத்துள்ள தகவல் மூலம் விபத்துக்கு கேட் கீப்பரின் அலட்சியமே காரணம் என்பது உறுதியாகியுள்ளது.