திருவண்ணாமலை: மீசநல்லூரில் குடிநீர் என நினைத்து தின்னர் குடித்த 3 குழந்தைகளுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த மீசநல்லூர் கிராமத்தில் இயங்கி வரும் அங்கன்வாடி மையத்தில் புதிய வண்ணம் பூச பணிக்காக வைக்கப்பட்ட பெயிண்ட்டின் சின்ன பாட்டில் குடிநீர் என்று நினைத்து குடித்த 3 குழந்தைகள் வந்தவாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
வந்தவாசி அடுத்து மீசநல்லூர் கிராமத்தில் அங்கன்வாடி மையத்தில் செயல்பட்டுவருகிறது. இந்த மையத்தில் 25 குழந்தைகள் பயன்று வருகின்றனர். இந்த நிலையில் இன்று 5 குழந்தைகள் வந்த நிலையில் அங்கன்வாடி பொறுப்பாளர் தரைமணி குழந்தைகளை கவனித்து வந்துள்ளார்.
இந்த நிலையில் அங்கன்வாடி மையத்திற்கு கடந்த ஒரு வரமாக புதிய வண்ணம் பூசும் பணி நடைபெற்று வந்த நிலையில் பெயிண்ட்டின் தின்னர் பாட்டிலில் வண்ணம் பூசியவர்கள் அங்கன்வாடி மையத்தில் வைத்துள்ளனர். அங்கன்வாடிக்கு வந்த சுதர்ஷன், மதன்ராஜ், விஷ்ணு ஆகிய 3 குழந்தைகள் அங்கன்வாடி மையத்தில் வைத்திருந்த பெயிண்ட் தின்னரை தண்ணீர் என்று நினைத்து குடித்துள்ளனர்.
உடனடியாக தகவல் அறிந்து வந்தவாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேல்சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவத்தால் வந்தவாசியில் பெரும் பரபரப்பை ஏற்பட்டது.