தமிழ்நாட்டில் உள்ள 38 கோயில் யானைகளில் சிறந்த யானையாகக் கும்பகோணம் ஆதி கும்பேஸ்வரர் கோயிலின் மங்களம் யானை தேர்வு
கும்பகோணம்: தமிழ்நாட்டில் உள்ள 38 கோயில் யானைகளில் சிறந்த யானையாகக் கும்பகோணம் ஆதி கும்பேஸ்வரர் கோயிலின் மங்களம்(56) என்ற யானை தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதற்கு ‘ஆன் ஆக்டிவ் எலிபன்ட்' என்ற விருது வழங்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் உள்ள கோவில் யானைகளில் மிக வயதான யானை இதுவாகும். வயதான யானையாக இருந்தாலும் சிறு குழந்தை போல் சுறுசுறுப்பாகச் செயல்படும் என பக்தர்கள் தெரிவித்துள்ளனர்.