ராஞ்சி: சட்டீஸ்கர், மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் போன்ற மாநிலங்களில் நக்சலைட்டுகள், மாவோயிஸ்ட்டுகளின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது. அவர்களை ஒடுக்கும் நடவடிக்கையில் மாநில சிறப்பு தனிப்படை போலீசாருடன் இணைந்து மத்திய ரிசர்வ் போலீசாரும் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக, கடந்த சில மாதங்களாக நக்சலைட்டுகளை ஒழிக்கும் நடவடிக்கையில் ஒன்றிய அரசு தீவிரம் காட்டி வருகிறது. அடுத்தாண்டு மார்ச் மாதத்திற்குள் நாட்டில் நக்சலைட்டுகளை முழுவதும் ஒழிக்க ஒன்றிய அரசு காலக்கெடு நிர்ணயித்துள்ளது. இதன் காரணமாக நக்சலைட்டுகளுக்கு எதிராக பாதுகாப்பு படையினர் அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
இதனால் பல நக்சலைட்டுகள் ஆயுதங்களை கைவிட்டு சரணடைந்து வருகின்றனர். அதே நேரத்தில் நக்சலைட்டுகள் திருந்தி வாழ அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், சட்டீஸ்கர் மாநிலம் பிஜாபூர் மாவட்டத்தில் 9 பெண்கள் உள்பட 30 நக்சலைட்டுகள் ஆயுதங்களை கைவிட்டு நேற்று போலீசில் சரணடைந்தனர். இதில் 20 நக்சலைட்டுகள் மொத்தம் 79 லட்ச ரூபாய் சன்மானம் அறிவிக்கப்பட்டவர்கள் ஆவர்.