விழுப்புரம்: கள்ளக்குறிச்சி அருகே மலைக்கோட்டாலம் கிராமத்தில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் 2 பேர் வெட்டிக் கொலை செய்யப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வெட்டிக் கொலை செய்யப்பட்ட ஆண், பெண் யார்?, கொலையாளிகள் குறித்து வரஞ்சரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கொலை செய்யப்பட்டு இறந்து போன இருவர் தலையையும் கொலையாளி எடுத்துச் சென்று விட்டதாகவும் போலீஸ் தரப்பில் தகவல் தெரிவிக்கபப்ட்டுள்ளது. குற்றவாளி மற்றும் இறந்தவர்களின் தலைகளை வரஞ்சரம் போலீசார் தேடி வருகின்றனர். இச்சம்பவம் அந்த கிராமத்தில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது
+
Advertisement