2-வது டி20 கிரிக்கெட் போட்டி: இந்திய அணிக்கு எதிரான போட்டியில் 51 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணி அபார வெற்றி..!
2-வது டி20 கிரிக்கெட் போட்டி: இந்திய அணிக்கு எதிரான போட்டியில் 51 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணி அபார வெற்றி பெற்றுள்ளது. முல்லன்பூர் மைதானத்தில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் பந்துவீச்சை தேர்வு செய்தார். முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்க அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 213 ரன்கள் எடுத்திருந்தது. பின்னர் களமிறங்கிய இந்திய அணி 19.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 162 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது.


