சென்னை: எத்தியோப்பியா நாட்டில் இருந்து சென்னை விமான நிலையத்துக்கு வந்த விமானத்தில் ரூ.20 கோடி மதிப்புள்ள 2 கிலோ கொக்கைன் போதை பொருளை சாக்லேட் பாக்கெட்டில் கடத்தி வந்த சீன நாட்டை சேர்ந்த பயணிகள் இருவரை கைது செய்துள்ளனர்.
ஆப்பிரிக்கா நாடுகளில் ஒன்றான எத்தியோப்பிய நாட்டின் தலைநகரான அடிடாஸ் அபாபீல் இருந்து சென்னை சர்வதேச விமான நிலையத்துக்கு இன்று காலை விமானம் ஒன்று வந்தது. அந்த விமானத்தில் போதை பொருள் கடத்துவதாக சென்னையில் உள்ள மத்திய வருவாய் புறனாய்வு துறை அதிகாரிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை அடுத்து அதில் வந்த பயணிகளில் தீவிரமாக சோதனை செய்தனர்.
இந்த நிலையில் பயணிகள் மீது சந்தேகம் அடைந்து சுமார் 28 வயதுள்ள ஒரு பயணியை தனி இடத்திற்கு அழைத்து சென்று விசாரித்த போது முன்னுக்கு பின் முரணாக பேசியுள்ளார் மேலும் அவருடன் மற்ற ஒரு பயணி வந்துள்ளார். மேலும் அவர் உடம்பை சோதனை செய்த போது சாக்லேட் கொண்டுவந்துள்ளார்.
அதில் முழுமையாக சோதனை செய்த போது அதுக்குள் கொக்கைன் போதை பொருள் சுமார் 2 கிலோ இருந்தது தெரியவந்தது . அது சர்வதேச மதிப்பு சுமார் 20 கோடி என தெரியவந்தது.
இதனை அடுத்து அந்த இரண்டு பேரையும் கைது செய்து சென்னை தி.நகரில் உள்ள மத்திய வருவாய் புறனாய்வு அலுவலகத்திற்கு அழைத்துச்சென்று அவருடன் தொடர்ந்து விசாரணை செய்து வருகிறார்கள். சுமார் 20 கோடி ரூபாய் மதிப்புள்ள போதை பொருள் பிடிபட்டது சென்னை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.