சென்னை: சென்னை விமான நிலையத்தில் ரூ.20 கோடி மதிப்புள்ள 2 கிலோ கொக்கைன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. எத்தியோப்பியா நாட்டில் இருந்து சென்னைக்கு கடத்தி கொண்டுவந்த 2 கிலோ கொக்கைன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சாக்லேட் போன்று வடிவமைத்து உடலில் மறைத்து கொண்டுவந்த போதைப்பொருளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். போதைப்பொருளை கடத்தி வந்த கென்யா நாட்டைச் சேர்ந்த இளைஞரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
+
Advertisement