Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

24 மணி நேரம் காத்திருந்து திருப்பதியில் பக்தர்கள் தரிசனம்

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவம் கடந்த மாதம் 24ம்தேதி தொடங்கி கடந்த 2ம்தேதி தீர்த்தவாரியுடன் 9 நாட்கள் நடைபெற்ற விழா நிறைவுபெற்றது. இதில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். ஆனால் பிரம்மோற்சவம் நிறைவு பெற்ற பிறகும் பக்தர்களின் வருகை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே உள்ளது. இதனால் இன்று காலை காத்திருப்பு அறைகள் அனைத்தும் நிரம்பியதால் பக்தர்கள் வெளியே சுமார் 3 கி.மீ. தூரம் காத்திருக்கின்றனர்.

இதனால் இவர்கள் 24 மணி நேரம் காத்திருந்து சுவாமியை தரிசனம் செய்யும் நிலை உள்ளது. அதே நேரத்தில் நேர ஒதுக்கீடு டிக்கெட் பெற்றவர்கள் மற்றும் ரூ.300 டிக்கெட் பெற்ற பக்தர்கள் சுமார் 6 மணி நேரத்தில் தரிசனம் செய்தனர். நேற்று 83,380 பக்தர்கள் தரிசனம் செய்தனர். 32,275 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். உண்டியலில் ரூ.3.71 கோடி காணிக்கை செலுத்தியுள்ளனர்.