Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

வரும் 22ம் தேதி வரை நீட்டிப்பு பிஎன்ஒய்எஸ் பட்டப்படிப்பு சேர்க்கைக்கு கால அவகாசம்: ஓமியோபதி துறை இயக்குநரகம் அறிவிப்பு

சென்னை: ஓமியோபதி துறை இயக்குநரகம் வெளியிட்ட அறிக்கை: 2024-25ம் கல்வியாண்டில் தமிழ்நாட்டிலுள்ள அரசு மற்றும் சுயநிதி யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான பி.என்.ஒய்.எஸ். பட்டப் படிப்பு சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் தனித்தனியாக தகுதி உள்ளவர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன. இதற்கான விண்ணப்பப் படிவம் மற்றும் தகவல் தொகுப்பேட்டை www.tnhealth.tn.gov.in என்ற வலைதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பப் படிவங்கள் எந்த ஆயுஷ்முறை மருத்துவக் கல்லூரிகளிலோ வழங்கப்பட மாட்டாது.

விண்ணப்பிக்க தேவையான தகுதிகள், விண்ணப்பக் கட்டணம் மற்றும் பிற கட்டண விவரங்கள், கலந்தாய்விற்கான அட்டவணை ஆகியவற்றையும் இணையதளத்தின் மூலம் அறியலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள், கோரப்பட்டுள்ள அனைத்து சான்றிதழ்களின் சுயசான்றொப்பமிட்ட நகல்களையும் இணைத்து செயலாளர், தேர்வுக்குழு, இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை இயக்குநர் அலுவலகம், அறிஞர் அண்ணா அரசினர் இந்திய மருத்துவமனை வளாகம், அரும்பாக்கம், சென்னை-600 106 என்ற முகவரிக்கு தபால், கூரியர் சேவை வாயிலாக வரும் 22ம் தேதி மாலை 5.30 மணிக்குள் வந்து சேருமாறு சமர்ப்பிக்க வேண்டும்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.