சென்னை: 2026ம் ஆண்டுக்கான விடுமுறையை தமிழக அரசு அறிவித்து, அதற்கான அரசாணையை தலைமைச் செயலாளர் முருகானந்தம் பிறப்பித்துள்ளார். தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணை: பொது விடுமுறை நாட்களாக குறிப்பிடப்பட்ட ஞாயிற்றுக்கிழமைகளுடன், பின்வரும் நாட்களும் 2026ம் ஆண்டிற்கான பொது விடுமுறை நாட்களாக கருதப்படும் என தமிழக அரசு அறிவிக்கிறது.
பொது விடுமுறை தேதி கிழமை
ஆங்கில புத்தாண்டு 1-1-2026 வியாழக்கிழமை
பொங்கல் 15-1-2026 வியாழக்கிழமை
திருவள்ளுவர் நாள் 16-1-2026 வெள்ளிக்கிழமை
உழவர் திருநாள் 17-1-2026 சனிக்கிழமை
குடியரசு நாள் 26-1-2026 திங்கட்கிழமை
தைப்பூசம் 1-2-2026 ஞாயிற்றுக்கிழமை
தெலுங்கு வருடப்பிறப்பு 19-3-2026 வியாழக்கிழமை
ரம்ஜான் 21-3-2026 சனிக்கிழமை
மகாவீரர் ஜெயந்தி 31-3-2026 செவ்வாய்கிழமை
வங்கிகள் ஆண்டு கணக்கு முடிவு 1-4-2026 புதன்கிழமை
புனித வெள்ளி 3-4-2026 வெள்ளிக்கிழமை
தமிழ்ப் புத்தாண்டு
/அம்பேத்கர் பிறந்த நாள் 14-4-2026 செவ்வாய்கிழமை
மே நாள் 1-5-2026 வெள்ளிக்கிழமை
பக்ரீத் 28-5-2026 வியாழக்கிழமை
மொகரம் 26-6-2026 வெள்ளிக்கிழமை
சுதந்திர நாள் 15-8-2026 சனிக்கிழமை
மிலாதுன் நபி 26-8-2026 புதன்கிழமை
கிருஷ்ண ஜெயந்தி 4-9-2026 வெள்ளிக்கிழமை
விநாயகர் சதுர்த்தி 14-9-2026 திங்கட்கிழமை
காந்தி ஜெயந்தி 2-10-2026 வெள்ளிக்கிழமை
ஆயுத பூஜை 19-10-2026 திங்கட்கிழமை
விஜயதசமி 20-10-2026 செவ்வாய்கிழமை
தீபாவளி 8-11-2026 ஞாயிற்றுக்கிழமை
கிருஸ்துமஸ் 25-12-2026 வெள்ளிக்கிழமை
