2026 சட்டமன்ற தேர்தலில் பாஜக காணாமல் போய்விடும்; திமுக மீண்டும் ஆட்சியமைக்கும்: அமைச்சர் ரகுபதி பேட்டி
சென்னை: 2026 சட்டமன்ற தேர்தலில் பாஜக காணாமல் போய்விடும்; திமுக மீண்டும் ஆட்சியமைக்கும் என அமைச்சர் ரகுபதி புதுக்கோட்டையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களை தமிழ்நாட்டில் வாக்காளர்களாக சேர்க்கக் கூடாது. தமிழ்நாட்டில் வேலை செய்யும் வடமாநிலத்தவர் எண்ணிக்கை லட்சத்தில் இருந்து கோடியாக மாறியுள்ளது.
வடமாநிலங்களில் இருந்து வந்தவர்களுக்கு தமிழ்நாட்டின் சூழ்நிலை தெரியாது. தமிழ்நாட்டின் நிலவரம் தெரியாதவர்களை வாக்காளராக சேர்க்கக் கூடாது என்பதுதான் எங்களது கோரிக்கை. பீகாரில் சிறுபான்மையினரையும் பட்டியல் இனத்தினரையும் வாக்காளர் பட்டியலில் இருந்து எஸ்ஐஆர் மூலம் நீக்க முயற்சி செய்யப்பட்டுள்ளது. சிறுபான்மையினர், பட்டியலினத்தவரை பட்டியலில் இருந்து நீக்கவே சிறப்பு திருத்தம் கொண்டுவருகின்றனர்.
