1X என்ற சூதாட்ட செயலி மூலம் சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடைபெற்றதாக வழக்கு: கிரிக்கெட் வீரர் ஷிகர் தவானுக்கு ED சம்மன்
டெல்லி: சட்டத்துக்கு புறம்பான சூதாட்ட செயலிகள் தொடர்பான வழக்குகளை அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது. ஏற்கனவே , தெலுங்கானாவில் மகாவீர் என்ற சட்டத்துக்கு புறம்பான செயலி வழக்கில் 25 முன்னணி நடிகர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. அதே போல் பல பகுதிகளில் இயங்கிவரும் 1x என்ற சூதாட்ட செயலி தொடர்பான விளம்பரங்களில் நடித்ததாக ஷிகர் தவான்னுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஹர்பஜன்சிங்கிற்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஏற்கனவே ஹர்பஜன்சிங், சுரேஷ் ரெய்னா ஆஜராகி தங்களது விளக்கங்களை வழங்கி உள்ளனர்.
தற்போது ஷிகர் தவான் இந்த வழக்கில் ஆஜராகி உள்ளார். அமலாக்கத்துறையானது இது போன்ற சட்டத்துக்கு புறம்பான சூதாட்ட செயலிகளை பயன்படுத்தி வரி முறைகேட்டில் ஈடுபட்டதாக அமலாக்கத்துறை கண்டுபிடித்தது. அதை தொடர்ந்து சூதாட்ட செயலிகளுக்கு விளம்பரங்களில் நடித்தவர்களை அழைத்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகிறது. ஏற்கனவே ஹர்பஜன்சிங், சுரேஷ் ரெய்னா தங்களது மாநிலங்களில் சூதாட்டம் அனுமதிக்கப்பட்டுள்ளது. அதனால் இத்தகைய விளம்பரங்களில் நடித்தோம் என்ற தங்களது விளக்கத்தை வழங்கினர்.