பெஷாவர், அக்.9: பாகிஸ்தானில் உளவுத்துறை அடிப்படையிலான நடவடிக்கையில் தெஹ்ரிக் இ தலிபான் பாகிஸ்தான் தீவிரவாத அமைப்பை சேர்ந்த 19 தீவிரவாதிகள் மற்றும் 11 வீரர்கள் உயிரிழந்தனர். பாகிஸ்தானில் தடை செய்யப்பட்ட தெஹ்ரிக் இ தலிபான் தீவிரவாத அமைப்பு கடந்த 2002ம் நவம்பரில் அரசு உடனான தனது போரை நிறுத்தத்தை முறித்தது. இது பாதுகாப்பு படைகள், காவல்துறை மற்றும் சட்ட அமலாக்கத்துறை நிறுவனங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகின்றது. குறிப்பாக கைபர் பக்துன்க்வா மற்றும் பலுசிஸ்தான் மாகாணங்களில் தீவிரவாத தாக்குதல்கள் அதிகரித்துள்ளது.
பதற்றமான கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் தடை செய்யப்பட்ட தெஹ்ரிக் இ தலிபான் பாகிஸ்தான் குழுவை சேர்ந்த தீவிரவாதிகள் இருப்பதாக உளவுத்துறை தகவல் தெரிவித்தது. இதன் அடிப்படையில் ஆப்கானிஸ்தானின் எல்லையையொட்டி உள்ள மாகாணத்தின் ஒராக்ஸாய் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் தேடுதல்நடவடிக்கையில் ஈடுபட்டனர். அப்போது நடந்த மோதலில் 19தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த நடவடிக்கையின்போது பாகிஸ்தான் பாதுகாப்பு படையை சேர்ந்த 11 வீரர்கள் உயிரிழந்தனர்.