சென்னை: கடந்த 4 ஆண்டுகளில் 18.50 லட்சம் பேருக்கு பட்டா தரப்பட்டுள்ளது என துணை முதல்வர் உதயநிதி தெரிவித்துள்ளார். மேலும் "மகளிர் விடியல் பயணம் மூலம் இதுவரை 770 கோடி முறை பெண்கள் பயணம் செய்துள்ளனர். காலை உணவு திட்டத்தில் 22 லட்சம் குழந்தைகளுக்கு தினந்தோறும் உணவு வழங்கப்பட்டு வருகிறது.
புதுமை பெண் திட்டம், தமிழ் புதல்வன் திட்டத்தால் 8 லட்சம் மாணவர்கள் பயன் பெற்று வருகின்றனர். மகளிர் உரிமை தொகை திட்டத்தால் மாதம் 1 கோடியே 15 லட்சம் குடும்பங்கள் பயனடைகின்றன. உங்களுடன் ஸ்டாலின் திட்டம் முகாமில் தரப்பட்ட மனுக்களில் 40% பேர் உரிமை தொகை கேட்டு மனு. விடுபட்ட மற்றும் தகுதியான மகளிருக்கு உதவி தொகை நிச்சயம் வழங்கப்படும்" என்று துணை முதல்வர் தெரிவித்துள்ளார்.