பெஷாவர்: பாகிஸ்தானின் வடமேற்கு கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் கரக் மாவட்டத்தில் முல்லா நசீர் தலைமையிலான தீவிரவாத குழுவினர் மறைந்துள்ளதாகவும், இவர்கள் தெஹ்ரிக்-இ-தலிபான்-பாகிஸ்தானுடன் தொடர்புடையவர்கள் எனவும் பாதுகாப்பு படையினருக்கு நம்பத்தக்க தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் எல்லை பாதுகாப்புப்படையினர் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பதுங்கி இருந்த தீவிரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தினர். பதிலுக்கு பாதுகாப்பு படை நடத்திய தாக்குதலில் 17 தீவிரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர். அவர்களிடமிருந்து ஏராளமான ஆயுதங்கள், வெடிமருந்துகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. மறைந்திருந்த ஏராளமான தீவிரவாதிகள் தப்பி சென்று அருகிலுள்ள இடங்களில் பதுங்கி இருப்பதால் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
+
Advertisement