காஞ்சிபுரம்: மத்திய பிரதேசத்தின் கடந்த மாதம் 4 ம் தேதி முதல் 26 ம் தேதிகுள் 1 முதல் 7 வயதுக்கு உட்பட 16 குழந்தைகள் சந்தேகத்திற்கு இடமாக உயிரிழந்தனர். சளி, காச்சல், இரும்பல் காரணமாக அவதி பெற்ற குழந்தைகளுக்கு மருத்துவர் பரிந்துரையின்படி மருந்துகள் வழங்கப்பட்டுள்ளன.
அதன் பிறகு சீறுநீரகம் பிரச்சனை ஏற்பட்டு குழந்தைகள் பலியாகி உள்ளன. இது குறித்து மத்திய பிரதேச மாநில சுகாதாரத்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது. இதை அடுத்து காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் செயல்பட்டு வரும் ஸ்ரீசன் ஃபர்மா நிறுவனத்தின் தயாரிக்கப்பட்ட இரும்பல் மருந்து தான் இதுக்கு காரணம் என்று தெரியவந்தது.
தற்போது அந்த நிறுவனத்திற்கு நோட்டீஸ் வழங்கப்பட்டு மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் 16 குழந்தைகள் உயிரிழந்த விவகாரத்தில் இரும்பல் மருந்து தயாரிக்கப்பட்ட நிறுவனத்திற்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் ஒட்டப்பட்டது. காஞ்சிபுரம் மண்டல மருத்துவ கட்டுப்பாடு துறை ஆய்வாளர் மணிமேகலை நோட்டீஸ் ஒட்டினார் .