சென்னை: தமிழகம் முழுவதும் 12 டிஎஸ்பிக்கள் பணியிடமாற்றம் டிஜிபி வெங்கடராமன் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட உத்தரவு: சென்னை, ஆயுதப்படை உதவி கமிஷனராக இருந்த சுப்ரமணியன், கோயம்பேடு போக்குவரத்து அமலாக்கப்பிரிவு உதவி கமிஷனராகவும், சென்னை ஆயுதப்படை உதவி கமிஷனராக இருந்த முருகராஜ், கொளத்தூர் போக்குவரத்து அமலாக்கப்பிரிவு உதவி கமிஷனராகவும், கோவை மாநகர போக்குவரத்து உதவி கமிஷனராக இருந்த தென்னரசு, நீலகிரி மாவட்ட ஆயுதப்படை டிஎஸ்பியாகவும், தாம்பரம் போக்குவரத்து உதவி கமிஷனராக இருந்த ராஜன், திருவண்ணாமலை மாவட்ட ஆயுதப்படை டிஎஸ்பியாகவும், திருச்சி போக்குவரத்து உதவி கமிஷனராக இருந்த முகமது ரபி, தூத்துக்கு மாவட்ட ஆயுதப்படை டிஎஸ்பியாகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் சென்னை ஆயுதப்படை உதவி கமிஷனராக இருந்த ஜோசப், ஆவடி போக்குவரத்து அமலாக்கப்பிரிவு உதவி கமிஷனராகவும், தமிழ்நாடு ஆயுதப்படை டிஎஸ்பியாக இருந்த ஜெயச்சந்திரன் ஆவடி போக்குவரத்து உதவி கமிஷனராகவும், புதுக்கோட்டை மாவட்ட ஆயுதப்படை டிஎஸ்பியாக இருந்த ஜானகிராம், கோவை மாநகர மேற்கு போக்குவரத்து உதவி கமிஷனராகவும், வேலூர் மாவட்ட ஆயுதப்படை டிஎஸ்பியாக இருந்த ஜீன்பென்சன், தாம்பரம் போக்குவரத்து உதவி கமிஷனராகவும், திருவள்ளூர் மாவட்ட ஆயுதப்படை டிஎஸ்பியாக இருந்த கணேஷ்குமார், தூத்துக்குடி ஆயுதப்படை டிஎஸ்பியாகவும், பெரம்பலூர் மாவட்ட ஆயுதப்படை டிஎஸ்பியாக இருந்த ரத்தினம், புதுக்கோட்டை ஆயுதப்படை டிஎஸ்பியாகவும், மயிலாடுதுறை மாவட்ட ஆயுதப்படை டிஎஸ்பியாக இருந்த கிருஷ்ணன், சென்னை ஆயுதப்படை உதவி கமிஷனராகவும் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
