Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பெரம்பலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கைப்பற்றப்பட்ட 1,156 கிலோ புகையிலை பொருட்கள் அழிப்பு

*கலெக்டர், எஸ்பி முன்னிலையில் தீவைத்து எரிக்கப்பபட்டது

பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்டத்தில் காவல்துறையினர் மற்றும் உணவுப்பாதுகாப்புத்துறையினரின் பல்வேறு ஆய்வு களின்போது பல்வேறு இடங்களில் இருந்து கைப்பற்றப்பட்ட சுமார் 1,156 கிலோ எடையுள்ள தடை செய்யப்பட்ட குட்கா, பான்மசாலா, கூலிப், உள்ளிட்ட பொருட்கள் பெரம்பலூர் மாவட்டக் கலெக்டர் கற்பகம், மாவட்ட எஸ்பி ஷ்யாம்ளா தேவி ஆகியோர் முன்னிலையில் நேற்று (4ஆம்தேதி) எளம்பலூர் ஊராட்சி குப்பை சேமிப்புக் கிடங்கில் ஆழக் குழிதோண்டி கொட்டி எரித்து அழிக்கப்பட்டது.

தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, பான் மசாலா, கூலிப், உள்ளிட்ட பொருட்களை யாரும் வாங்கவோ விற்கவோ கூடாது என தொடர்ந்து வலியுறுத்தப்பட்டுவருகின்றது.இத்தகைய பொருட்களைப் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்தும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப் பட்டு வருகிறது. மேலும் தடைசெய்யப்பட்ட பொருட் களை தயாரித்தல், சேமித்து வைத்தல், விநியோகித்தல், வாகனங்களில் எடுத்து செல்லுதல், விற்பனை செய்தல், பயன்படுத்துதல் போன்ற செயல்களில் ஈடு படும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டும் வருகிறது.

இந்நிலையில் பெரம்பலூர் மாவட்ட காவல்துறையினரால் பல்வேறு ஆய்வுகளின்போது பல்வேறு இடங் களில் இருந்து கைப்பற்றப்பட்ட, தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, பான் மசாலா, கூல்-லிப் உள்ளிட்ட சுமார் 1152.108 கிலோ கிராம் எடையுள்ள பொருட் களும் மற்றும் உணவுப் பாதுகாப்புத்துறை சார்பில் கைப்பற்றப்பட்ட 3.785 கிலோ கிராம் என மொத்தம் சுமார் 1156 கிலோ (1155.893 கிலோ) எடையுள்ள புகையிலைப் பொருட்களை எளம்பலூர் ஊராட்சி குப்பைக் கிடங்கில் பொதுமக்களு க்கு எவ்வித இடையூறும் ஏற்படா வண்ணம் மாவட்ட கலெக்டர் கற்பகம், மாவட்ட எஸ்பி காவல் ஷ்யாம்ளா தேவி ஆகியோர் முன்னி லையில் ஆழமாகக் குழி தோண்டி கொட்டி எரித்து அழிக்கப்பட்டது.

முழுவதும் எரிந்த பின்னர் மீண்டும் மண்ணைக் கொட்டி குழி மூடப்பட்டது.இந்த நிகழ்ச்சியின்போது, பெரம்பலூர் மாவட்ட மது விலக்கு அமலாக்கப்பிரிவு ஏடிஎஸ்பி பாலமுருகன், உணவுப் பாதுகாப்புத் துறையின் பெரம்பலூர் மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் கவிக்குமார், பெரம் பலூர் தாசில்தார் சரவணன், எளம்பலூர் ஊராட்சி மன்றத் தலைவர் சித்ரா தேவி குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.