சென்னை: சென்னை சௌகார்பேட்டை பகுதியில் இயங்கி வரும் பிரபல ஜூல்லரி கடையில் பணியாற்றி வரும் மேற்பர்வையாளர், விற்பனை பிரதிநிதி மற்றும் கார் ஓட்டுநர் உள்ளிட்ட மூன்று பேர் நேற்று முன்தினம் இரவு திண்டுக்கல்லில் இருந்து 10 கிலோ தங்க அவரணத்துடன் திருச்சி வழியாக சென்னை நோக்கி காரில் புறப்பட்டு சென்று கொண்டிருந்தனர்.
திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே இருங்களூர் என்கிற இடத்தில் தேசிய நெடும்சாலையில் சென்ற போது மற்ற ஒரு காரில் பின்தொடர்ந்து வந்த மர்மநபர்கள் சிலர் மூன்று பேரின் முகத்தில் மிளகாய் பொடியை தூவி 10 கிலோ தங்க அவரணத்தை கொள்ளை அடித்து கொண்டு தப்பிச்சென்றனர். இது குறித்து சமயபுரம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
மேலும் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட கொள்ளையர்களை பிடிக்க திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் உத்தரவின் பேரில் அன்றைய தினமே நான்கு தனிப்படைகள் அமைக்கபட்ட நிலையில் தற்போது 5 தாவதாக தனிப்படை அமைக்கபட்டு கொள்ளையர்கள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இந்த நிலையில் சம்பவத்தன்று ஜூல்லரி கடை பணியாளர்கள் காரை ஒட்டி வந்த ஓட்டுனரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அவர் கொள்ளையர்கள் குறித்து போலீசாரிடம் சிலமுக்கிய தகவல்களை தெரிவித்திருக்கிறார். அதன் அடிப்படையில் இந்த கொள்ளை சம்பவம் ஆனது தீரன் படத்தில் வருவது போல அரங்கேற்ற பட்டிருக்கலாம் என தமிழக போலீசார் சந்தேகத்தில் உள்ளனர்.
இதன் தொடர்ச்சியாக மூன்று தனிப்படை போலீசார் நேற்று இரவே ராஜஸ்தான், ஹைட்ராபாத், ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களுக்கு விரைந்து சென்றனர். தற்போது ராஜஸ்தான்னில் முகாமிட்டுள்ள தமிழக போலீசார் ராஜஸ்தான் மாநில போலீசார் உதவியுடன் சந்தேகத்தின் பேரில் மூன்று பேரை கைது செய்து ரகசிய இடத்தில்வைத்து விசாரணை செய்து வருவதாக தற்போது தகவல் வெளியாகி இருக்கிறது.