Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கடந்த ஜூலை மாதத்தில் பயணிகள் வாகன விற்பனை10 சதவீதம் அதிகரிப்பு

பயணிகள் வாகன விற்பனை கடந்த ஜூலை மாதத்தில் 10 சதவீதம் அதிகரித்துள்ளதாக, ஆட்டோமொபைல் டீலர்கள் சங்கக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. கடந்த ஜூலை மாத வாகன விற்பனை விவரங்களை, ஆட்டோமொபைல் டீலர்கள் சங்கக் கூட்டமைப்பு வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:கடந்த ஜூலை மாதத்தில் 3,20,129 பயணிகள் வாகனங்கள் விற்பனையாகியுள்ளன. முந்தைய ஆண்டு இதே மாதம் 2,90,564 வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டன. இத்துடன் ஒப்பிடுகையில் விற்பனை 10 சதவீதம் அதிகரித்துள்ளது. டூவீலர்கள் விற்பனை 17 சதவீதம் அதிகரித்து 14,43,163 ஆக உள்ளது. இது கடந்த ஜூலையில் 12,31,630 ஆக இருந்தது. வணிக பயன்பாட்டு வாகனங்கள் விற்பனை 7 சதவீதம் உயர்ந்து 80,057 ஆக உள்ளது. அதேநேரத்தில் டிராக்டர்கள் விற்பனை 12 சதவீதம் சரிந்து, 79,970 ஆனது. இதுகுறித்து டீலர்கள் சங்க கூட்டமைப்பு துணைத் தலைவர் சி.எஸ்.விக்னேஷ்வர் கூறுகையில், ‘‘வாடிக்கையாளர்கள் மத்தியில் பிரபலம் அடைந்த வாகனங்கள் போதுமான அளவுக்கு இருப்பு, கவர்ச்சிகரமான சலுகை திட்டங்கள் போன்றவை வாகன விற்பனைக்குக் கைகொடுத்துள்ளன. ஆனாலும், கனமழை, போட்டி ஆகியவற்றால் விற்பனையில் சவால்களை சந்திக்க வேண்டியிருந்தது. விற்பனை செய்யப்படாத வாகனங்கள் இருப்பு 67 நாட்களில் இருந்து 72 நாட்களாக உயர்ந்துள்ளது. மொத்தம் ரூ.73,000 கோடி மதிப்பிலான வாகனங்கள் விற்பனையாகாமல் டீலர்களிடையே தேங்கிக் கிடக்கின்றன,’’ என்றார்.