Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

‘நலம் காக்கும் ஸ்டாலின்’ முகாம்களில் இதுவரை 1.49 லட்சம் பேர் பயன்பெற்றுள்ளனர்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!

கடந்த 3 சனிக்கிழமைகளில் நடைபெற்ற ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ முகாம்களில் இதுவரை 1.49 லட்சம் பேர் பயன்பெற்றுள்ளனர் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார். “ஆகஸ்ட் 2 தொடங்கி, சனிக்கிழமைதோறும் நடைபெற்று வரும் நலம் காக்கும் ஸ்டாலின் முகாம்களில் இதுவரை 3 வாரங்கள் நிறைவுற்றுள்ளன! முதல் வாரம் ( ஆகஸ்ட் 2) 44,795 மருத்துவப் பயனாளிகள் இரண்டாம் வாரம் (ஆகஸ்ட் 9) 48,046 மருத்துவப் பயனாளிகள், மூன்றாம் வாரம் (ஆகஸ்ட் 23) 56,245 மருத்துவப் பயனாளிகள் பயன்பெற்றுள்ளனர். மருத்துவ சேவை வழங்குவதிலும், மக்களின் உடல்நலனைக் காப்பதிலும் தமிழ்நாடுதான் 'நம்பர் 1' என உறுதிசெய்வோம்” என்று கூறியுள்ளார்.