புதுடெல்லி: மருத்துவ நிபுணர்கள் கூறுகையில், “புகைப்பழக்கத்துக்கு எதிராக பரவலான விழிப்புணர்வு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும் புகைப்பவர்கள் எண்ணிக்கை குறையவில்லை. இந்தியாவை பொறுத்தவரை ஆண்டுக்கு 13.5 லட்சம் பேர் புகைப்பதால் உயிரிழக்கின்றனர். இந்தியா ஆண்டுதோறும் புகையிலை தொடர்பான நோய்களுக்காக ரூ.1.77 லட்சம் கோடிக்கு மேல் செலவிடுகிறது” என தெரிவித்துள்ளனர்.
மேலும், “புகைப்பிடிப்பதை விட புகையற்ற எரியாத நிகோடின் குறைந்த அளவு அபாயங்களை கொண்டுள்ளது என்பது அறிவியல் ஆய்வுகள் மூலம் தெரிய வந்துள்ளது. உலகம் முழுவதும் தற்போது புகைக்கும் சிகரெட்டுக்கு பதிலாக மெல்லும் நிகோடின் பைகள் பரவலாக தொடங்கி உள்ளன. நிகோடின் பைகளால் அறவே ஆபத்து ஏற்படாது என சொல்ல முடியாது ” என மருத்துவ வல்லுநர்கள் கூறி உள்ளனர்.