Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

செய்தி துளிகள்

* காவிரியின் குறுக்கே மேகதாட்டு அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தஞ்சாவூரில் ரயில் மறியல் போராட்டம் நடத்தியவிவசாய சங்க மாநில தலைவர் உட்பட 112 பேர் நேற்று கைது செய்யப்பட்டனர்.

* கல்லணையில் ஆய்வு செய்த காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவர் எஸ்.கே.ஹல்தர் கூறுகையில், ‘மேகதாதுவில் அணை கட்டுவது தொடர்பாக சாத்தியக்கூறு முழுமையடையவில்லை. அதன்பிறகு இந்த திட்டம் வருமா, வராது என கூற முடியும். இந்த நிலையில் எதுவும் உறுதிசெய்யப்படவில்லை’ என்றார்.

* திருமங்கலம் அருகே இரண்டு வயது பெண் குழந்தை தங்களுக்கு இடையூறாக இருப்பதாக நினைத்து, கொலை செய்த தாய் மற்றும் அவரது மூன்றாவது கணவர் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

* பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் சமூக வலைத்தளத்தில் அவதூறு ஆடியோ வெளியிட்ட மணப்பாறையை சேர்ந்த பாஜ மாவட்ட செயற்குழு உறுப்பினரான கண்ணன்(எ) அயோத்தி கண்ணன்(51) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

* கோபி கரட்டூரில் உள்ள தவெக மாநில நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் அலுவலகத்தின் முன், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 9ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு முன்னாள் எம்.பி. சத்தியபாமா தலைமையில் ஜெயலலிதா படத்திற்கு மரியாதை செய்யப்பட்டது.

* நெல்லையில் நெய் அல்வா எனக்கூறி நெய்யே சேர்க்காமல் அல்வா விற்று வந்த 10 கடைகளை மூடி சுமார் 500 கிலோ அல்வா பறிமுதல் செய்யப்பட்டது.

* சந்தன கடத்தல் வீரப்பன் தேடுதல் வேட்டையில், அதிரடிப்படையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்க வேண்டிய பாக்கி இழப்பீட்டு தொகை ரூ.2.59 கோடி வழங்கப்பட்டு விட்டது என்று அரசு தரப்பில் தாக்கல் செய்த அறிக்கையை ஏற்று சென்னை உயர் நீதிமன்றம் வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டது.

* நீலகிரி மாவட்டம், குன்னூர் பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த இசை பயிற்சி ஆசிரியர் பிரசாந்துக்கு ஆயுள் தண்டனை விதித்து ஊட்டி மகளிர் விரைவு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

* கிறிஸ்துமஸ், புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஊட்டி- மேட்டுப்பாளையம், குன்னூர்- ஊட்டி, ஊட்டி- கேத்தி- ஊட்டி இடையே சிறப்பு மலை ரயில் வரும் 25ம் தேதி முதல் ஜனவரி 26ம் தேதி வரை இயக்கப்படுகிறது.

* 2016ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் விதிமீறலில் ஈடுபட்டதாக தொடரப்பட்ட வழக்கில் இருந்து பாஜ எம்எல்ஏ வானதி சீனிவாசன் விடுதலை செய்யப்பட்டார்.