கிட்னி விற்பனை விவகாரம்: 2 மருத்துவமனைகளில் சிறுநீரகம் மாற்று அறுவை சிகிச்சைக்கான உரிமம் நிறுத்தி வைப்பு
திருச்சி: சிறுநீரகம் பெற்றதாக எழுந்த புகாரின் அடிப்படையில் இரண்டு மருத்துவமனைகளுக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிக்சை மேற்கொள்ள வழங்கப்பட்ட உரிமைத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாக தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அறிவித்துள்ளது. பள்ளிபாளையத்தில் சிறுநீரகம் விற்றதாக எழுந்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு சுகாதார திட்ட இயக்குநர் வினீத் ஐ.ஏ.எஸ். ஆகிய தலைமையில் குழு அமைத்து மக்கள் நல்வாழ்வுத்துறை உத்தரவிட்டு இருந்தது.
இது தொடர்பாக பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக்கல்லுரி மருத்துவமனை மற்றும் திருச்சி சிதார் மருத்துவமனையில் மருத்துவ குழுவினர் ஆய்வு செய்து முதல் கட்ட விசாரணை அறிக்கையை தமிழ்நாடு அரசுக்கு வழங்கினர். இதன் அடிப்படையில் குறிப்பிட்ட இரண்டு மருத்துவமனைகளுக்கும் சீறுநீரகம் மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ள வழங்கப்பட்ட உரிமத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்து மருத்துவம் மற்றும் ஊரக நல பணிகள் இயக்குனரகம் நடவடிக்கை எடுத்துள்ளது.