டெல்லியில் தெருக்களில் சுற்றித்திருந்த நடிகை மீரா மிதுனை மீட்டு காப்பகத்தில் தங்க வைத்த போலீசார்

டெல்லி: டெல்லியில் தெருக்களில் சுற்றித்திருந்த நடிகை மீரா மிதுனை மீட்டு காப்பகத்தில் போலீசார் தங்க வைத்தனர். பட்டியலினத்தவர் பற்றி அவதூறாக பேசியதாக நடிகை மீரா மிதுன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வழக்கு பதிந்து பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்ட நிலையில் நடிகை மீரா மிதுன் தலைமறைவானார். ...

வரும் ஆண்டுகளில் இந்தியாவின் ஆன்லைன் ஷாப்பிங் வளர்ச்சி பெறும்: மிக்கென்சி நிறுவன ஆய்வறிக்கையில் தகவல்

டெல்லி: வரும் ஆண்டுகளில் இந்தியாவின் ஆன்லைன் ஷாப்பிங் வளர்ச்சி பெறும் என மிக்கென்சி நிறுவன ஆய்வறிக்கையில் தகவல் வெளியாகி உள்ளது. நாட்டில் இணையதளத்தை பயன்படுத்தும் 850 மில்லியன் பேரில் 20 முதல் 25% பேரே ஆன்லைனில் பொருள் வாங்குகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா, சீனாவை ஒப்பிடும்போது இந்தியாவில் ஆன்லைனில் ஷாப்பிங் செய்பவர்கள் சதவீதம் குறைவு....

கிட்னி விற்பனை விவகாரம்: 2 மருத்துவமனைகளில் சிறுநீரகம் மாற்று அறுவை சிகிச்சைக்கான உரிமம் நிறுத்தி வைப்பு

திருச்சி: சிறுநீரகம் பெற்றதாக எழுந்த புகாரின் அடிப்படையில் இரண்டு மருத்துவமனைகளுக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிக்சை மேற்கொள்ள வழங்கப்பட்ட உரிமைத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாக தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அறிவித்துள்ளது. பள்ளிபாளையத்தில் சிறுநீரகம் விற்றதாக எழுந்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு சுகாதார திட்ட இயக்குநர் வினீத் ஐ.ஏ.எஸ். ஆகிய...

குஜராத் மாநிலத்தில் லிவ் இன் காதலி கொலை மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரர் வெறிச்செயல்

அஹமதாபாத்: குஜராத் மாநிலம் கட்ச் பகுதியில் உள்ள அஞ்சார் காவல் நிலையத்தில் உதவி சப் இன்ஸ்பெக்டராக வேலை செய்துவந்தவர் அருணாபென். இவருக்கு கடந்த 2021 ஆம் ஆண்டு இன்ஸ்டாகிராம் மூலம் மத்திய ரிசர்வு போலீஸ் படை வீரர் திலீப் என்பவருடன் அறிமுகம் ஏற்பட்டது. இந்த அறிமுகம் நாள்அடைவில் காதலாக மாறியது இதை அடுத்து இருவரும் திருமணம்...

திருத்தணி, திருப்போரூர், குன்றத்தூர் உள்பட பல்வேறு பகுதி முருகன் கோயில்களில் ஆடி கிருத்திகை விழா: காவடிகளுடன் குவிந்த பக்தர்கள்

திருத்தணி: முருகப்பெருமானின் ஐந்தாம் படைவீடான திருத்தணி முருகன் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி மாத முதல் கிருத்திகை விழா மிக விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தாண்டு ஆடி கிருத்திகை விழா மற்றும் தெப்ப திருவிழா அடுத்த மாதம் 16ம் தேதி கொண்டாடப்படுகிறது. முன்னதாக, ஆடி மாத முதல் கிருத்திகையை முன்னிட்டு, திருத்தணி முருகன் கோயிலில் இன்று காலை...

ஆட்டோவில் கடத்திய 94 கிலோ குட்கா பறிமுதல்: 3 பேர் கைது

ஆலந்தூர்: ஆதம்பாக்கம் அம்பேத்கர் நகர் பிரதான சாலை அருகே நேற்று முன்தினம் இரவு போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது ஆட்டோ ஒன்று போலீசாரை கண்டவுடன் திரும்பிச் செல்ல முயன்றது. அந்த ஆட்டோவை போலீசார் மடக்கி பிடித்து சோதனையிட்ட போது குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் இருப்பது தெரிந்தது. இதையடுத்து, ஆட்டோவில் இருந்த 3...

‘ஓரணியில் தமிழ்நாடு’’ திமுக உறுப்பினர் சேர்க்கை முகாம்

காஞ்சிபுரம்: முட்டவாக்கம் ஊராட்சியில் ``ஓரணியில் தமிழ்நாடு’’ திமுக உறுப்பினர் சேர்க்கை முகாமை தலைமை செயற்குழு உறுப்பினர் எம்.எஸ்.சுகுமார் தொடங்கி வைத்தார். காஞ்சிபுரம் ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் திமுக சார்பில் மண், மொழி, மானம் காக்க இணைவோம் ‘‘ஓரணியில் தமிழ்நாடு’’ எனும் கருத்தை முன்னிறுத்தி, உறுப்பினர் சேர்க்கை முகாம் முட்டவாக்கம் ஊராட்சியில் நடந்தது. காஞ்சிபுரம் தெற்கு...

"சாட் ஜிபிடியை அதிகம் நம்ப வேண்டாம்": ஓபன் ஏஐ தலைவர் சாம் ஆல்ட்மன்

வாஷிங்டன்: சாட் ஜிபிடியை அதிகம் நம்ப வேண்டாம் என்று ஓபன் ஏ.ஐ.தலைவர் சாம் ஆல்ட்மன் அறிவுறுத்தியுள்ளார். சாட் ஜிபிடியை மக்கள் அதிகம் நம்புகிறார்கள் என்ற விஷயத்தை நான் கண்டறிந்தேன். செயற்கை நுண்ணறிவு என்பது தவறான தகவல்களை அளிக்க முடியாதது அல்ல, செயற்கை நுண்ணறிவு தவறான தகவல்களையும் கணிப்புகளையும் உருவாக்கக் கூடியதே; செயற்கை நுண்ணறிவும் தவறுகளைச் செய்யும்...

தெலுங்கானாவில் ரசாயன ஆலையில் பாய்லர் வெடித்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 37-ஆக உயர்வு

தெலுங்கானாவில் ரசாயன ஆலையில் பாய்லர் வெடித்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 37-ஆக உயர்ந்துள்ளது. சங்கர்ர்ரெட்டி மாவட்டத்தில் தொழிற்சாலையில் ஊழியர்கள் பணியில் இருந்தபோது நேற்று திடீரென்று பாய்லர் வெடித்தது; 30-ம் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்டுள்ளனர். ...

மதுரையில் சினிமா பாணியில் துணிகரம்; சென்னை கணவரை தாக்கி புதுப்பெண் காரில் கடத்தல்: 4 பேர் கும்பலுக்கு வலை

திருமங்கலம்: மதுரை திருமங்கலத்தில் சினிமா பாணியில் கணவரை தாக்கி புதுப்பெண்ணை காரில் கடத்தி சென்ற 4 பேர் கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே சுவாமிமல்லம்பட்டியை சேர்ந்தவர் விஜயபிரகாஷ் (29). சிவில் இன்ஜினியர். சென்னையில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கும், கரிசல்காளன்பட்டியை சேர்ந்த ஆதிநாராயணன் மகள் சுபலெட்சுமி (22) என்பவருக்கும் கடந்த 28ம்...