Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

அரசு மருத்துமனைகளில் கூடுதல் கட்டிடம் அமைக்க ரூ.118 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை

சென்னை: அரசு மருத்துமனைகளில் கூடுதல் கட்டிடம் மற்றும் பொது சுகாதார ஆய்வக கட்டிடம் அமைக்க ரூ.118 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அரசு மருத்துவமனைகளில் கூடுதல் கட்டிடம், ஆய்வகம் அமைக்க ரூ.118 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, செங்கல்பட்டு - செய்யூர், கடலூர் - வேப்பூர், ஈரோடு - கவுண்டம்பாளையம், பெரம்பலூர் - வேப்பூர், கோவை (அன்னூர், சூலூர்), திண்டுக்கல் - நிலக்கோட்டை, ராமநாதபுரம் - கமுதி, நீலகிரி - கோத்தகிரி, திருவள்ளூர் - கும்மிடிப்பூண்டி,சிவகங்கை - பூலாங்குறிச்சி , திருப்பூர் - கரடிவாவி, அரியலூர் - உடையார்பாளையம் , கடலூர் - பரங்கிப்பேட்டை , திண்டுக்கல் - (ஆத்தூர் மற்றும் பட்லகுண்டு), கன்னியாகுமரி - குமரி , மயிலாடுதுறை - வைத்தீஸ்வரன் கோவில் , புதுக்கோட்டை - கீரனூர், ராமநாதபுரம் -(திருவாடனை மற்றும் கடலாடி), தென்காசி - சிவகிரி, விழுப்புரம் - வளவனூர் ஆகிய 31 வட்டார மற்றும் வட்டாரம் அல்லாத மருத்துவமனைகளில் கூடுதல் கட்டிடம் கட்ட 3.5 கோடி வீதம் மொத்தம் ரூ.108 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அதேபோல், கன்னியாகுமரி - பத்மநாபபுரம் அரசு மருத்துவமனை, விருதுநகர் - வில்லிபுத்தூர் அரசு மருத்துவமனை, நாமக்கல் - திருச்செங்கோடு அரசு மருத்துவமனை, கிருஷ்ணகிரி - ஒசூர் அரசு மருத்துவமனை, வேலூர் - குடியாத்தம் அரசு மருத்துவமனை, விழுப்புரம் - திண்டிவனம் அரசு மருத்துவமனை, ராமநாதபுரம் - பரமக்குடி அரசு மருத்துவமனை, கரூர் - குளித்தலை அரசு மருத்துவமனை, அரியலூர் - ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனை, புதுக்கோட்டை - அறந்தாங்கி அரசு மருத்துவமனை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு பொது சுகாதார ஆய்வகம் அமைக்க ரூ.10.72 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வு மற்றும் சுகாதாரத்துறையின் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Governmentordersallocating-Rs118crore-constructionadditionalbuildings-governmenthospitals