Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

குஜராத் மாநிலத்தில் லிவ் இன் காதலி கொலை மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரர் வெறிச்செயல்

அஹமதாபாத்: குஜராத் மாநிலம் கட்ச் பகுதியில் உள்ள அஞ்சார் காவல் நிலையத்தில் உதவி சப் இன்ஸ்பெக்டராக வேலை செய்துவந்தவர் அருணாபென். இவருக்கு கடந்த 2021 ஆம் ஆண்டு இன்ஸ்டாகிராம் மூலம் மத்திய ரிசர்வு போலீஸ் படை வீரர் திலீப் என்பவருடன் அறிமுகம் ஏற்பட்டது.

இந்த அறிமுகம் நாள்அடைவில் காதலாக மாறியது இதை அடுத்து இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல் லிவிங் முறையில் வாழ்ந்துவந்தனர் அவர்கள் விரைவில் திருமணம் செய்ய திட்டமிட்டனர் திலீப் மணிப்பூரில் வேலை செய்துவந்தர். விடுமுறைக்கு வரும்போது அருணாவிடம் தங்கியிருப்பது வழக்கம். தற்போது விடுமுறைக்கு வந்து அருணாவிடம் திலீப் தங்கியிருந்தார் இருவரும் அஹமதாபாத்துக்கு ஷாப்பிங் சென்று வந்தனர் சம்பவத்தன்று இரவு காதல்ஜோடிக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.

சிறிது நேரத்திலையே தடித்த வார்த்தைகள் வந்து விழுந்திருகின்றனர் இருவரும் மாறிமாறி திட்டிக்கொண்ட நிலையில் திலீப்பின் தாயார் குறித்து அருணா தகாதவார்த்தையில் திட்டி இருக்கிறார் ஏற்கனவே உச்சகட்ட கோபத்தில் இருந்த திலீப்க்கு அந்த வார்த்தைகள் கொலைவெறியை தூண்டியுள்ளது உடனே அருணாவின் கழுத்தை நெறுத்திருக்கிறார்.

அசையாசையாக காதலித்த காதலின் உயிர் தன் கையாலையே பிரிவதை கூட உணராதபடி கோவம் அவரை ஆக்கிரமித்து இருந்தது சிறிது நேரத்திலேயே அருணாவின் உயிர் பிரிந்துஇருக்கிறது. எல்லாம் நடந்துமுடித்த பிறகுதான் திலீப்க்கு நிதானம் திரும்பிருக்கிறது. காதலியை கொன்ற பயம் அவரை தொற்றிக்கொண்டது. அச்சத்தில் அவரும் தற்கொலை செய்துக்கொள்ள முடிவு எடுத்திருக்கிறார் கையை அறுத்து கொண்ட திலீப் வீட்டில் இருந்த பினாயிலையும் குடித்து இருக்கிறார்.

ஆனால் அவர் சாகவில்லை இரவு 10 மணிக்கு கொலை செய்த திலீப் இரவு முழுவதும் அருணாவின் உடலுடன் இருந்து உள்ளர். காலையில் அருணா வேலை செய்து வந்த காவல்நிலையத்துக்கு சென்று கொலை செய்து விட்டதாகக கூறி திலீப் சரண் அடைந்தார். உடனே போலீசார் விரைந்து சென்று அருணாவின் உடலை மிட்டு பெறாத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர் திலீப்பை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

சம்பவத்தன்று இரவு இருவரும் சண்டை போட்டபோது அந்த சத்தம் பக்கத்து வீட்டுகார்களுக்கும் கேட்டிருக்கிறது ஆனால் யாரும் அருணாவின் வீட்டுக்கு வந்து பார்க்கவில்லை ஒருவேலை யாராவது வந்து அவர்களின் சண்டையை நிறுத்திருந்தல் இந்த கொலை நடக்காமல் இருந்து இருக்கலாம் .