Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

“முதல்வர் படைப்பகம்” திட்டமானது முதல்வரின் சிந்தனையில் உதித்த திட்டம்; முதல்வர் மு.க.ஸ்டாலின் நீண்ட ஆயுளோடு நல்ல ஆரோக்கியத்தோடு வாழ இறைவனை கேட்டுக்கொள்கிறோம்: அமைச்சர் சேகர்பாபு

சென்னை: “முதல்வர் படைப்பகம்” திட்டமானது முதல்வரின் சிந்தனையில் உதித்த திட்டம்; முதல்வர் மு.க.ஸ்டாலின் நீண்ட ஆயுளோடு நல்ல ஆரோக்கியத்தோடு வாழ இறைவனை கேட்டுக்கொள்கிறோம் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், முதலமைச்சர் நல்வழிகாட்டுதலின்படி சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழும அமைச்சர் (ம) தலைவரும் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சருமான சேகர்பாபு மற்றும் பள்ளிக் கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி இன்று (14.11.2024) கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட சென்னை, பெரம்பூர், ஜி.கே.எம். காலனி அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி, மற்றும் மாநகராட்சி ஆரம்பப் பள்ளிகளை நேரில் சென்று பார்வையிட்டு குழந்தைகள் தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு இனிப்புகள் மற்றும் புத்தகங்கள் வழங்கி, காலை உணவை தொடங்கி வைத்தனர் மற்றும் சென்னை, அகரம், ஜெகநாதன் சாலையில் அமைந்துள்ள 'முதல்வர் படைப்பகத்தை' நேரில் சென்று பார்வையிட்டனர்.

பள்ளிக் கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி செய்தியாளர்களிடம் பேசும்போது தெரிவித்ததாவது :

தமிழ்நாடு முதலமைச்சருக்கு வாழ்த்துக்கள், பள்ளி படிக்கக்கூடிய எனது ஒரு கோடியே 25 லட்சம் மாணவர்களுக்கு குழந்தைகள் தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். முதலமைச்சர் வழிகாட்டுதலோடு துணை முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின்படி பள்ளிக்கல்வித்துறை ஒரே இடத்திலிருந்து வேலை செய்தால் போதாது, தமிழ்நாடு முழுவதும் சுற்றிவர வேண்டும் என்கின்ற வகையில் 2022 ஆம் ஆண்டு அக்டோபர் 10ஆம் தேதி ஆரம்பிக்கப்பட்ட இந்த பயணம் 24 மணி நேரமும் 234 தொகுதிகளிலும் ஆய்வு செய்யப்பட வேண்டும் என்றால் துறை சார்ந்து 77 வகையான காம்போனன்ட்ஸ் இன்ஸ்பெக்ட் செய்ய வேண்டும் என்று முடிவெடுத்தும் கிட்டத்தட்ட இரண்டு வருடம் நிறைவடைந்து 234வது தொகுதியாக இன்றைக்கு இந்த தொகுதியில் நான் நிறைவு செய்து இருக்கின்றேன்.

குழந்தைகள் தினத்தில் இன்று நிறைவு செய்கிறேன் என்ற பொழுது நல்ல வாய்ப்பை வழங்கியிருக்கின்ற அண்ணன் சேகர் பாபு அவர்களுக்கு நான் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இதில் கூடுதல் பெருமை என்னவென்றால் நான் ஆய்வுக்கு வந்து கொண்டிருக்கும் போது முதலமைச்சர் என்னை அலைபேசியில் தொடர்பு கொண்டு எந்த தொகுதியில் ஆய்வு மேற்கொண்டுள்ளீர்கள் என்று விசாரித்தார். தங்களது தொகுதியான கொளத்தூர் தொகுதியில் தற்பொழுது ஆய்வை மேற்கொள்ள உள்ளேன் என தெரிவித்தேன் 234 தொகுதிகளிலும் பல்வேறு விதமான அனுபவங்களை எனக்கு தருகின்றது.

ஒட்டுமொத்தமாக இந்த திராவிட மடல் அரசு infrastructure க்கு எவ்வளவு முக்கியத்துவம் தருகின்றது என்று என்பதை நீங்கள் பார்க்க வேண்டும்.

எங்களைப் பொருத்த வகையில் பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டு திட்டம் என்கிற வகையில் ஐந்து வருடத்தில் 7500 கோடி ரூபாய் மதிப்பில் 18,000 வகுப்பறைகள் கட்டப்பட்டுள்ளன. அந்த வகுப்பறைகள் மட்டுமல்லாமல் சுற்றுச்சுவர், கழிப்பறை, ஆய்வகங்கள் போன்ற அனைத்து கட்டிடங்களும் ஒருங்கிணைத்த இதில் நாங்கள் ஆய்வு செய்து கண்டறியப்பட்டுள்ள வகுப்பறைகளின் எண்ணின்கை 14,109 இதுவரை 7,756 வகுப்பறைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 6,350 வகுப்பறைகள் கட்டப்பட்டு வருகின்றன, 2,460 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டது. 500 கோடி ரூபாய் கிட்டத்தட்ட பாதியை கடந்துள்ளோம் இவை அனைத்தும் எவ்வாறு சாத்தியம் என்றால் தொடர்ந்து கண்காணித்து தொடர் ஆய்வுகளை மேற்கொண்டு முதலமைச்சர் ஆய்வுக் கூட்டங்களை நடத்தி உள்ளோம் என்றெல்லாம் போட்டி போட்டு கட்டமைப்புகளை பார்க்கும் பொழுது மிக மன நிறைவை இந்த ஜி.கே.எம் காலனியில் உள்ள பள்ளி தலைமை ஆசிரியர்கள் மேலும் இரண்டு பகுதிகளில் கூடுதலாக தேவைப்படுகிறது எனவும் கூடுதலாக மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக தெரிவித்துள்ளார்கள்.

ஒட்டுமொத்தமாக 4 பள்ளி இரண்டு கோடி ரூபாய் மதிப்பீட்டில் இங்க நேர்த்தியாகவும் அழகான கட்டமைப்புடன் கட்டடங்களை கட்டி உள்ளார்கள் இவை முதலமைச்சரின் சிஷ்யன் என்பதற்கு ஒரு சான்றாக உள்ளது. இது போன்றுதான் தமிழ்நாடு முழுவதும் கொண்டு வர வேண்டும் என்பதை என்னுடைய ஆசை. தொடர்ந்து முதலமைச்சர் தீவிர முயற்சியை கொண்டு வருவதாக தமிழ்நாடு முழுவதும் இது போன்ற அமைப்புகளை ஏற்படுத்த 234 தொகுதிக்கான அறிக்கைகளை நாங்கள் தயார் செய்ய வேண்டும். இவ்வாறு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத் தலைவருமான சேகர்பாபு செய்தியாளர்களிடம் பேசும்போது தெரிவித்ததாவது :

தமிழக முதல்வர் அவர்களுடைய சட்டமன்ற நிதியை கொண்டு கட்டப்பட்டுள்ள கட்டடம். முதலமைச்சர் இந்த கட்டடத்தை கட்டும்பொழுது மாதந்தோறும் வழங்கப்படுகின்ற உதவித்தொகை வழங்கும் விழாவில் மகளிர் சுய உதவிக்ழுகுக்கள் பயிற்சி பெறுவதற்காகத்தான் இந்த கட்டிடத்தை கட்டியுள்ளோம். முதல்வர் பெரியார் நகர் பகுதியில் ஒரு நூலகத்திற்குச் சென்ற பொழுது அங்கு பிள்ளைகள் பல்வேறு இடங்களில் இருந்து வந்து படித்துக் கொண்டிருந்தார்கள். அவர்களை முதல்வர் விசாரித்த பொழுது வீட்டிலேயே படிக்கின்ற சூழல் சரியாக இல்லாததாலும், டிஎன்பிசி தயார் செய்வதற்காகவும், இந்த இடத்தில் நாங்கள் படிக்கின்றோம் என்றார்கள். அன்றைய தினமே இந்த கட்டடத்தை ஆய்வு மேற்கொண்டு உடனடியாக முதலமைச்சராக இதை படிப்பகமாகவும், கோவர்கிங் ஸ்டேஷன் ஆகவும் கொண்டு வரலாம் என்று எங்களுக்கு உத்தரவிட்டிருந்தார்.

இது இன்றைக்கு செயல்பாட்டிற்கு வந்துவிட்டது. ஒரே நேரத்தில் 51 நபர்கள் படிப்பதற்கும் அதேபோல் 38 நபர்கள் அமர்ந்து வேலை பார்ப்பதற்கும் கண்ணியமான சூழலில் உருவாக்கப்பட்டிருக்கின்றது. முழுக்க குளிர்சாதன வசதிகள் செய்யப்பட்டிருக்கின்றது. அதிக நேரம் உட்கார்ந்து படித்தாலும் அதற்கு ஏற்ற இருக்கைகள் செய்யப்பட்டிருக்கின்றது. முதலமைச்சரின் உடனடி உத்தரவின் பேரில் வட சென்னையில் 10 இடங்களில் குறிப்பாக வடசென்னை வளர்ச்சி திட்டத்தின் கொண்டுவர வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார். அதற்கு மறுநாளே நானும் பெருநகரத்தின் உடைய மேயரும் பெருநகரத்தின் ஆணையாளர் குமரகுருபரன், எங்கள் துறையினுடைய செயலாளர் காக்கர்லா உஷா, எங்கள் துறையினுடைய உறுப்பினர் செயலாளர் அன்சுல் மிஸ்ரா, வட சென்னையில் இருக்கின்ற அனைத்து நூலகங்களுக்கும் நேரடியாக ஆய்வினை மேற்கொண்டோம், இடவசதி இருக்கின்ற இடங்களில் எல்லாம் அந்த பணிகளை துவக்கச் சொல்லி இருக்கின்றோம்.

முதற்கட்டமாக இதற்கு அடுத்த ஆர்வம் பெரியார் நகரில் உள்ள அந்த நூலகத்திற்கு ஜனவரி மாதம் 14ஆம் தேதி இது போன்ற ஒரு படிப்பகத்தை உருவாக்குவதற்கு பணிகள் தொடக்கி வைத்து கூடிய விரைவில் 2025 மார்ச் மாதம் தொடங்கி வைப்பதற்கு பத்து இடங்களில் இது போன்ற பணிகள் நடைபெற்று வருகின்றது. இது வட சென்னையில் பொருளாதாரத்தில் பின்தங்கி இருக்கின்ற மக்கள் ஏழை எளிய மக்கள் அவர்களின் வாழ்க்கைத் தரம் முன்னேறுவதற்கு பொருளாதார ரீதியாக வளர்ச்சி அடைவதற்கு இந்த படிப்பகம் நிச்சயமாக உதவிகரமாக இருக்கும். முழுக்க முழுக்க “முதல்வர் படைப்பகம்” திட்டமானது முதல்வர் சிந்தனையில் உதித்த திட்டம் அதில் மனதார பயன் பெற்றவர்கள் பாராட்டுகின்ற பொழுது அவர்கள் நீண்ட ஆயுளோடு நல்ல ஆரோக்கியத்தோடு வாழ எல்லாம் வல்ல இறைவனை கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத் தலைவருமான பி.கே.சேகர்பாபு தெரிவித்தார். இந்த ஆய்வுகளின் போது பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன், ஆணையாளர் ஜெ.குமரகுருபரன், இ.ஆ.ப., , மத்திய வட்டார துணை ஆணையாளர் கே.ஜே.பிரவீன் குமார், இ.ஆ.ப., மண்டலக் குழுத்தலைவர் சரிதா மகேஷ்குமார், இணை இயக்குநர் (பொது நூலகம்) இளங்கோ சந்திரகுமார், மண்டல அலுவலர் ஏ.எஸ்.முருகன், செயற்பொறியாளர் செந்தில்நாதன், மாமன்ற உறுப்பினர்கள் நாகராஜன், ஸ்ரீதணி, அமுதா, உள்ளாட்சிப் பிரதிநிதிகள் ஐசிஎப்.முரளி, சந்துரு, பள்ளி தலைமை ஆசிரியைகள் பெல்சியா ஜெபராணி, ரமணி, ஆசிரியர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர். இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.