சென்னை மெட்ரோ ரயில் நிலைய பணிகளுக்காக வரும் 4,5ம் தேதிகளில் குடிநீர் விநியோகம் நிறுத்தம்: சென்னை குடிநீர் வாரியம் தகவல்
சென்னை: சென்னை மெட்ரோ ரயில் நிலைய பணிகளுக்காக வரும் 4ம் தேதி காலை 10 மணியில் இருந்து 5ம் தேதி காலை 10 மணி வரை குடிநீர் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுவதாக சென்னை குடிநீர் வாரியம் தகவல் தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் (CMRL) தேனாம்பேட்டை மண்டலம், நுங்கம்பாக்கம் உத்தமர் காந்தி சாலை மற்றும் ஸ்டெர்லிங் சாலையில் குடிநீர் குழாய் இணைப்பு பணிகள் மேற்கொள்வதால் 04.03.2025 அன்று காலை 10.00 மணி முதல் 05.03.2025 அன்று காலை 10.00 மணி வரை (24 மணி நேரம்) வள்ளுவர்கோட்டம் குடிநீர் பகிர்மான நிலையம். தென்சென்னை குடிநீர் பகிர்மான நிலையம் மற்றும் கீழ்ப்பாக்கம் (TM7) குடிநீர் பகிர்மான நிலையங்களின் செயல்பாடுகள் தற்காலிகமாக நிறுத்தம் செய்யப்படும். ஆகையால் மண்டலம்-9 (தேனாம்பேட்டை), மண்டலம்-10 (கோடம்பாக்கம்) மற்றும் மண்டலம்-13 (அடையாறு)-க்குட்பட்ட கீழ்கண்ட சில பகுதிகளுக்கு குழாய்கள் மூலம் வழங்கப்படும் குடிநீர் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
மண்டலம்-9 (தேனாம்பேட்டை) பகுதிகள்
சூளைமேடு, நுங்கம்பாக்கம், ஆயிரம் விளக்கு, கோடம்பாக்கம் (பகுதி), தி.நகர் (பகுதி), இராயப்பேட்டை, கோபாலபுரம், தேனாம்பேட்டை, மயிலாப்பூர் (பகுதி).
மண்டலம்-10 (கோடம்பாக்கம்)
கோடம்பாக்கம், தி.நகர் (பகுதி), மேற்கு மாம்பலம், மேற்கு CIT நகர், மேற்கு சைதாப்பேட்டை.
மண்டலம்-13 (அடையாறு)
சைதாப்பேட்டை (பகுதி
எனவே, பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக, வேண்டிய அளவு குடிநீரை சேமித்து வைத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். அவசரத் தேவைகளுக்கு லாரிகள் மூலம் (Dial for Water) குடிநீர் பெற்றுக்கொள்ள வாரியத்தின் https://cmwssb.tn.gov.in என்ற இணையதள முகவரியினை பயன்படுத்தி பதிவு செய்து பெற்றுக்கொள்ளலாம். மேலும், குடிநீர் இணைப்பு இல்லாத பகுதிகள் மற்றும் அழுத்தம் குறைவான பகுதிகளுக்கு குடிநீர் தொட்டிகள் மற்றும் தெரு நடைகளுக்கு லாரிகள் மூலம் வழங்கப்படும் குடிநீர் விநியோகம் எந்தவித தடையுமின்றி வழக்கம்போல் சீரான முறையில் மேற்கொள்ளப்படும். என தெரிவிக்கப்பட்டுள்ளது.