Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்தவர்கள் பெண் குழந்தைகள் தின விருது பெற விண்ணப்பிக்கலாம்: கலெக்டர் தகவல்

செங்கல்பட்டு: தேசிய பெண் குழந்தைகள் தின விருது பெற தகுதியுடைய பெண் குழந்தைகள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட கலெக்டர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.

செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அருண்ராஜ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் சார்பில், பெண் குழந்தைகளின் சமூக முன்னேற்றத்திற்கு சிறப்பாக பங்காற்றும் 13 வயதிற்கு மேல் 18 வயதிற்குட்பட்ட தமிழகத்தில் வசிக்கும் பெண் குழந்தைகளுக்கு (டிசம்பர் 31ன்படி), தேசிய பெண் குழந்தை தினமான ஜனவரி 24, 2025ல் மாநில அரசின் விருதுக்கான காசோலை ₹1லட்சம் மற்றும் பாராட்டு பத்திரம் வழங்கப்பட உள்ளது.

மேற்படி விருதுக்கு விண்ணப்பிக்க விரும்பும் பெண் குழந்தைகள், பிற பெண் குழந்தைகளின் கல்விக்கு உதவுதல், பெண் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண் குழந்தை திருமணத்தை தடுத்தல் மற்றும் தவிர்த்தல், வேறு ஏதாவது வகையில் சிறப்பான, தனித்துவமான சாதனை செய்திருத்தல், பெண்களுக்கு எதிரான சமூக அவலங்கள், மூடநம்பிக்கைகள் ஆகியவற்றிற்கு தீர்வு காண்பதற்கு ஓவியங்கள், கவிதைகள் மற்றும் கட்டுரைகள் மூலமாகவோ விழிப்புணர்வு ஏற்படுத்தியிருத்தல், ஆண்கள் மட்டும் சாதிக்க முடியும் என்பதை போன்ற செயல்களை பெண்களாலும் சாதிக்க முடியும் என்று சாதித்திருத்தல் போன்ற அம்சங்களில் வீர தீர செயல் புரிந்திருக்க வேண்டும்.

மேற்காணும் விருதினை பெற விண்ணப்பிக்க விரும்பும் தகுதியுடைய பெண் குழந்தைகள், தமிழக அரசின் விருதுகள் இணையதளத்தில் (https://awards.tn.gov.in) 30.11.2024க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

இணையதளத்தில் பதிவு செய்த பிறகு அனைத்து ஆவணங்களையும் கையேடாக தயார் செய்து தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் அச்சு செய்யப்பட்டு தலா 3 நகல்கள் 5.12.2024 மாலை 5.45 க்குள் மாவட்ட சமூக நல அலுவலகம், B-Block 4வது தளம், அறை எண்.04-02, மாவட்ட ஆட்சியரக புதிய கட்டிடம், செங்கல்பட்டு 603 111 என்ற முகவரியில் நேரில் சமர்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.