சென்னை: எம்.பி மற்றும் எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான ஊழல் வழக்குகளுக்கு முன்னுரிமை வழங்கி விசாரிக்க வேண்டும் என சிறப்பு நீதிமன்றங்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சுப்ரீம்கோர்ட் உத்தரவின்படி, எம்.பி, எம்.எல்.ஏக்களுக்கு எதிரான வழக்குகளை கண்காணிப்பது பற்றி தாமாக முன்வந்து எடுத்த வழக்க்கில் உத்தரவிட்டுள்ளது. மாநிலம் முழுவதும் அனைத்து மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றங்களில் விசாரணையில் உள்ள எம்பி, எம்எல்ஏக்களுக்கு எதிரான வழக்கு குறித்த விபரம் பெற்று அறிக்கைதர ஐகோர்ட் பதிவாளருக்கு ஆணை உத்தரவிட்டுள்ளது.
+
Advertisement