வேலூர் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் பசுபதியை ஆதரித்து வேலூர் புறநகர் மாவட்டம் அதிமுக செயலாளர் வேலழகன் நேற்று குருவராஜபாளையம் பஸ்நிலையம் அருகே திறந்தவெளி ஜீப்பில் நின்றபடி வாக்கு சேகரித்து கொண்டிருந்தார். இந்நிலையில், வேலூர் தொகுதில் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளர் நடிகர் மன்சூர் அலிகான் வேப்பங்குப்பம் நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது, குருவராஜபாளையத்தில் வாக்கு சேகரித்துக் கொண்டிருந்த அதிமுக வேட்பாளர் பசுபதியை பார்த்து மன்சூர் அலிகான், ‘வணக்கம் பசுபதி சார் அவர்களே..
தோற்று போக போகும் நீங்கள் வாக்கு சேகரித்துக் கொண்டு இருக்குறீர்களே, நீங்கள் தோற்பதற்கு என்னுடைய வாழ்த்துக்கள்’ என்று நக்கலாக கிண்டல் செய்தார். அம்மாவை சாகடித்து விட்டு வாக்கு சேகரிக்கிறீர்களே என்று கூறி கொண்டே வேனில் நின்றபடி சென்றார். இதனால் ஆத்திரம் அடைந்த அதிமுக நிர்வாகிகள் சிலர் பைக்கில் மன்சூர் அலிகான் வாகனத்தை பின்தொடர்ந்து சென்றனர். அதற்குள் அவர் வேப்பங்குப்பத்தில் உள்ள பள்ளிவாசல் உள்ளே தொழுகை செய்வதற்காக சென்று விட்டார். இதனால் ஆத்திரமடைந்த அதிமுக நிர்வாகிகள் பள்ளிவாசல் முன் நின்று அதிமுக கட்சியை தவறாக பேசிய மன்சூர் அலிகான் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோஷமிட்டனர்.