Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கான்வார் யாத்திரையில் புதிய சர்ச்சை உணவு கடைகளில் உரிமையாளர் பெயர், முகவரி கட்டாயம்: உபி, உத்தரகாண்ட் அரசுகளின் உத்தரவால் பரபரப்பு

லக்னோ: கான்வார் யாத்திரையை முன்னிட்டு பக்தர்களுக்கு உணவு வழங்க அமைக்கப்படும் கடைகளில் உரிமையாளர் பெயர், முகவரி கட்டாயம் என்று உத்தரபிரதேசம், உத்தரகாண்ட் அரசுகள் பிறப்பித்த உத்தரவால் பரபரப்பு எழுந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் சிவபக்தர்கள் டெல்லியில் இருந்து ஜூலை 22ம் தேதி முதல் உத்தரபிரதேசம் வழியாக உத்தரகாண்ட் மாநிலம் கங்கோத்திரிக்கு ஆன்மீக பயணம் மேற்கொள்வார்கள். லட்சக்கணக்கான பக்தர்கள் செல்லும் இந்த பயணத்தை கான்வார் யாத்திரை என்று அழைப்பார்கள். இந்த பக்தர்கள் வசதிக்காக அவர்கள் செல்லும் வழியில் பலர் தற்காலிக உணவு மையம் அமைப்பது வழக்கம். இந்த முறை அப்படி உணவு கூடம் அமைப்பவர்கள் தங்கள் உரிமையாளரின் பெயர், முகவரி, செல்போன் ஆகியவற்றை கடைகளில் நன்றாக தெரியும்படி கடை போர்டுகளில் எழுத வேண்டும் என்று உபி மாநிலம் முசாபர்நகர் போலீசார் அறிவுறுத்தி இருந்தனர்.

இந்த உத்தரவு சர்ச்சையை ஏற்படுத்தி இருந்த நிலையில், தற்போது முசாபர்நகர் போலீசாரின் உத்தரவை உபி, உத்தரகாண்ட் அரசுகள் கட்டாயமாக்கி உத்தரவிட்டுள்ளன. இந்த யாத்திரை ஆகஸ்ட் 2ம் தேதி வரை நடைபெறும்.உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ஹரித்துவார், ரிஷிகேஷ், நீல்கந்த், கங்கோத்திரி உள்ளிட்ட பகுதிகளில் பக்தர்கள் வழிபடுவார்கள். ஆனால் திடீரென கடைகளில் உரிமையாளர் பெயர் மற்றும் அனைத்து விவரங்களையும் பதிவிட உத்தரவிட்டது அரசியல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஒன்றிய அமைச்சர் சிராக் பாஸ்வான் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மேலும் பீகார் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதாதளம் கட்சியும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. காங்கிரஸ், சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் கட்சிகளும் கண்டனம் தெரிவித்து உள்ளன.