Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

புதிய பயண அட்டை வழங்கும் வரை சீருடை அணிந்த மாணவர்களுக்கு பஸ்களில் இலவச அனுமதி: அமைச்சர் சிவசங்கர் பேட்டி

பெரம்பலூர்: புதிய பேருந்து பயண அட்டை வரும்வரை, மாணவர்கள் சீருடை அணிந்து வந்தாலே இலவசமாக பயணம் செய்ய அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் சா.சி.சிவசங்கர் தெரிவித்தார். பெரம்பலூரில் போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி சிவசங்கர் ேநற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி : அரசு பேருந்துகளில் பயணம் செய்யும் மாணவ, மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் புதிதாக வாங்கப்பட்டுள்ள அனைத்து பேருந்துகளிலும் தானியங்கி கதவுகள் பொருத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே இயங்கி வரும் அரசு பேருந்துகளிலும் தானியங்கி கதவுகள் பொருத்தும் பணிகள் துவங்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் அரசு பேருந்துகளில் பள்ளிக்கு சென்று வருவதற்காக புதிய பயண அட்டை வரும்வரை பழைய அட்டையை பயன்படுத்தலாம். மாணவ, மாணவிகள் பள்ளிச்சீருடை அணிந்து வந்தாலே இலவசமாக பயணம் செய்ய அனுமதிக்க போக்குவரத்துத்துறை அலுவலர்களுக்கும், ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. படிகளில் மாணவர்கள் தொங்கி கொண்டு பயணிப்பது, இதனை கண்டிப்பதால் டிரைவர், கண்டக்டர்களிடம் தகராறு செய்வது போன்ற சம்பவங்கள் எங்காவது நிகழலாம். இதனால் ஆங்காங்கே போக்குவரத்து அலுவலர்கள், பள்ளி தலைமை ஆசிரியர்கள், வட்டார போக்குவரத்து அலுவலர்கள் மூலம் இதனை கட்டுப்படுத்தி நடவடிக்கை எடுப்பதற்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

சென்னை மாநகரம் முழுவதும் பரீட்சார்த்த முறையில் 3,000 பேருந்துகளில் ஜி.பி.எஸ் கருவிகள் செயல் படுத்தப்பட்டுள்ளது. இதன் சாதக, பாதகங்களை ஆய்வு செய்து படிப்படியாக விரிவுபடுத்தப்படும். யுபிஐ மூலம் கட்டணம் செலுத்தும் முறை சென்னை மாநகர பேருந்துகளில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. சில இடங்களில் பிரச்னை வந்த பொழுது கூடுதலாக மிஷின் வாங்கப்பட்டு உடனடியாக மாற்றி கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதுவும் பரீட்சார்த்தமான திட்டம்தான். போகப்போக எல்லா இடங்களிலும் விரிவுபடுத்திட நடவடிக்கை எடுக்கப்படும். அரசு விரைவு போக்குவரத்து கழகத்திலும் இந்த திட்டம் இப்போது அமல்படுத்தப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.